/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்தியாவை சமாளிக்க முடியுமா * என்ன சொல்கிறார் ஜெயசூர்யாஇந்தியாவை சமாளிக்க முடியுமா * என்ன சொல்கிறார் ஜெயசூர்யா
இந்தியாவை சமாளிக்க முடியுமா * என்ன சொல்கிறார் ஜெயசூர்யா
இந்தியாவை சமாளிக்க முடியுமா * என்ன சொல்கிறார் ஜெயசூர்யா
இந்தியாவை சமாளிக்க முடியுமா * என்ன சொல்கிறார் ஜெயசூர்யா
ADDED : ஜூலை 24, 2024 10:05 PM

பல்லேகெலே: 'டி-20' தொடருக்கான இலங்கை அணி கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 'டி-20' போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. போட்டிகள் ஜூலை 27, 28, 30ல் பல்லேகெலே மைதானத்தில் நடக்க உள்ளது. ரோகித் சர்மா, கோலி, ஜடேஜா ஓய்வு பெற்றதால், புதிய கேப்டன் சூர்யகுமார், புதிய பயிற்சியாளர் காம்பிர் தலைமையில் இந்திய 'டி-20' அணி களமிறங்கியுள்ளது.
மறுபக்கம் இலங்கை தரப்பில் புதிய கேப்டனாக அசலங்கா, தற்காலிக பயிற்சியாளராக, 1996ல் ஒருநாள் உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற, முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தொடர் குறித்து ஜெயசூர்யா கூறியது:
உலகின் சிறந்த வீரர்கள் ரோகித் சர்மா, கோலி. இவர்களுடன் ஜடேஜாவும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது இவர்கள் 'டி-20'ல் ஓய்வு பெற்றது, இந்திய அணிக்கு இழப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணிக்கு எதிரான தொடரை வெல்ல முயற்சிப்போம்.
இலங்கை வீரர்கள் இப்போது தான் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்றுள்ளனர். தற்போது இந்திய தொடருக்கு சிறப்பான முறையில் தயாராகியுள்ளோம். சிறப்பான பயிற்சியாளர், போதிய வசதி என தேவையான அனைத்தையும் இலங்கை கிரிக்கெட் போர்டு எங்களுக்கு கொடுத்துள்ளது. இனி வீரர்கள் தான் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.