/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: இலங்கை புதிய ஆசிய சாம்பியன்இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: இலங்கை புதிய ஆசிய சாம்பியன்
இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: இலங்கை புதிய ஆசிய சாம்பியன்
இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: இலங்கை புதிய ஆசிய சாம்பியன்
இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: இலங்கை புதிய ஆசிய சாம்பியன்
ADDED : ஜூலை 28, 2024 11:42 PM
தம்புலா: பைனலில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இலங்கை அணி முதன்முறையாக ஆசிய கோப்பை வென்றது.
இலங்கையின் தம்புலாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ('டி-20') 9வது சீசன் நடந்தது. பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு ஷபாலி வர்மா (16) சுமாரான துவக்கம் கொடுத்தார். உமா செத்ரி (9), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (11) சோபிக்கவில்லை. ஜெமிமா ரோட்ரிக்ஸ் (29) ஓரளவு கைகொடுத்தார். மற்றொரு துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (60) அரைசதம் கடந்தார். ரிச்சா கோஷ் 14 பந்தில் 30 ரன் விளாசினார்.
இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்தது. பூஜா (5), ராதா யாதவ் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் கவிஷா 2 விக்கெட் வீழ்த்தினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு விஷ்மி (1) ஏமாற்றினார். இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய கேப்டன் சமாரி, ஹர்ஷிதா அரைசதம் கடந்தனர். இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய வீராங்கனைகள் தடுமாறினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்த போது தீப்தி சர்மா பந்தில் சமாரி (61) போல்டானார். பூஜா பந்தை சிக்சருக்கு அனுப்பிய கவிஷா வெற்றியை உறுதி செய்தார்.
இலங்கை அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய பெண்கள் அணி, ஆசிய கோப்பை பைனலில் 2வது முறையாக தோல்வியை தழுவியது. இதற்கு முன் 2018ல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த பைனலில் வங்கதேசத்திடம் வீழ்ந்தது.
* பெண்களுக்கான ஆசிய கோப்பை அரங்கில் இந்திய அணி 7 முறை (2004, 2005-06, 2006, 2008, 2012, 2016, 2022) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. வங்கதேசம் (2018), இலங்கை (2024) அணிகள் தலா ஒரு முறை கோப்பை வென்றன.