/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய அணி திணறல் ஆட்டம் * ஜெய்ஸ்வால் அரைசதம்இந்திய அணி திணறல் ஆட்டம் * ஜெய்ஸ்வால் அரைசதம்
இந்திய அணி திணறல் ஆட்டம் * ஜெய்ஸ்வால் அரைசதம்
இந்திய அணி திணறல் ஆட்டம் * ஜெய்ஸ்வால் அரைசதம்
இந்திய அணி திணறல் ஆட்டம் * ஜெய்ஸ்வால் அரைசதம்
ADDED : பிப் 24, 2024 05:35 PM

ராஞ்சி: ராஞ்சி டெஸ்டில் இந்திய பேட்டர்கள் திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் இன்னிங்சில் 219 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், இந்திய அணி 2--1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் ஜார்க்கண்ட்டில் உள்ள ராஞ்சியில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 302/7 ரன் எடுத்திருந்தது. ரூட்(106), ராபின்சன்(31) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ராபின்சன் அரைசதம் எட்டினார். இவரை 58 ரன்னில் வெளியேற்றிய ஜடேஜா, அடுத்து வந்த பஷிரை, 2வது பந்தில் 'டக்' அவுட்டாக்கினார். கடைசியில் ஆண்டர்சனும் (0) ஜடேஜா வலையில் சிக்கினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 353 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் (122) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3, சிராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஜெய்ஸ்வால் அரைசதம்
இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது. ரோகித் 2 ரன் எடுத்த போது, ஆண்டர்சன் 'வேகத்தில்' வீழ்ந்தார். சுப்மன் கில் (38), ரஜத் படிதர் (17), ஜடேஜா (12) மூவரும் சோயப் பஷிர் வலையில் சிக்கினர். மறுபக்கம் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். இவர் 73 ரன் எடுத்த போது, பஷிர் பந்தில் போல்டானார்.
சர்பராஸ் கான் 14 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். அஷ்வின் நிலைக்கவில்லை. இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன் மட்டும் எடுத்து, 134 ரன் பின்தங்கியுள்ளது. துருவ் ஜோரல் (30), குல்தீப் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.