/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய பேட்டிங் வரிசையில் மாற்றமா: ரோகித் சர்மா விளக்கம்இந்திய பேட்டிங் வரிசையில் மாற்றமா: ரோகித் சர்மா விளக்கம்
இந்திய பேட்டிங் வரிசையில் மாற்றமா: ரோகித் சர்மா விளக்கம்
இந்திய பேட்டிங் வரிசையில் மாற்றமா: ரோகித் சர்மா விளக்கம்
இந்திய பேட்டிங் வரிசையில் மாற்றமா: ரோகித் சர்மா விளக்கம்
ADDED : ஜூன் 02, 2024 10:58 PM

நியூயார்க்: 'டி-20' உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தியது. இதில் கோலி இடம் பெறாத நிலையில், மூன்றாவது வீரராக ரிஷாப் பன்ட் களமிறக்கப்பட்டார். 32 பந்தில் அரைசதம் எட்டி வெற்றிக்கு கைகொடுத்தார்.
வரும் போட்டிகளில் துவக்கத்தில் கேப்டன் ரோகித் சர்மா, கோலி வரலாம். மூன்றாவது இடத்தில் ரிஷாப் தொடர வாய்ப்பு உள்ளது.
இது குறித்து ரோகித் கூறுகையில்,''இந்திய அணியின் 'பேட்டிங்' வரிசையை இன்னும் முடிவு செய்யவில்லை. மூன்றாவது வீரராக ரிஷாப் பன்ட்டிற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தோம். அவ்வளவு தான். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ரிஷாப், ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டனர்,'' என்றார்.