Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கோப்பை வென்றது இந்தியா: பார்வையற்றோர் நட்பு கிரிக்கெட்டில்

கோப்பை வென்றது இந்தியா: பார்வையற்றோர் நட்பு கிரிக்கெட்டில்

கோப்பை வென்றது இந்தியா: பார்வையற்றோர் நட்பு கிரிக்கெட்டில்

கோப்பை வென்றது இந்தியா: பார்வையற்றோர் நட்பு கிரிக்கெட்டில்

ADDED : பிப் 25, 2024 10:05 PM


Google News
Latest Tamil News
துபாய்: பார்வையற்றோருக்கான 3வது 'டி-20' போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது இந்தியா.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய மூன்று போட்டிகள் கொண்ட பார்வையற்றோருக்கான நட்பு கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்தது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி துபாயில் நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 193 ரன் எடுத்தது. முகமது சல்மான் (74) நம்பிக்கை தந்தார். இந்தியா சார்பில் கேப்டன் துர்கா ராவ் 3, வெங்கடேஷ்வரா ராவ் 2 விக்கெட் சாய்த்தனர்.

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு வெங்கடேஷ்வரா ராவ் (33) நல்ல துவக்கம் தந்தார். பின் இணைந்த சுனில் ரமேஷ் (64*), அஜய் குமார் ரெட்டி (66) அரைசதம் கடந்து வெற்றிக்கு உதவினர். இந்திய அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை அஜய் குமார் ரெட்டி வென்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us