/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்தியா 'ஏ' அணி முன்னிலை: ராகுல், அபிமன்யு அரைசதம்இந்தியா 'ஏ' அணி முன்னிலை: ராகுல், அபிமன்யு அரைசதம்
இந்தியா 'ஏ' அணி முன்னிலை: ராகுல், அபிமன்யு அரைசதம்
இந்தியா 'ஏ' அணி முன்னிலை: ராகுல், அபிமன்யு அரைசதம்
இந்தியா 'ஏ' அணி முன்னிலை: ராகுல், அபிமன்யு அரைசதம்
ADDED : ஜூன் 08, 2025 11:45 PM

நார்தாம்ப்டன்: ராகுல், கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் அரைசதம் கடந்து கைகொடுக்க இந்தியா 'ஏ' அணி முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, 2 போட்டிகள் (4 நாள்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் 'டிரா' ஆனது. நார்தாம்ப்டனில் 2வது டெஸ்ட் நடக்கிறது. இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 348 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 192/3 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு கலீல் அகமது தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' ஜோர்டான் காக்ஸ் (45), கேப்டன் ஜேம்ஸ் ரேவ் (10) வெளியேறினர். துஷார் தேஷ்பாண்டே பந்தில் மேக்ஸ் ஹோல்டன் (7) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய கலீல் பந்தில் ஜார்ஜ் கில் (0), கிறிஸ் வோக்ஸ் (5) ஆட்டமிழந்தனர். பர்ஹாம் அகமது (24), நிதிஷ் குமாரிடம் சரணடைந்தார்.
இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 327 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஜோஷ் டங் (36) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா 'ஏ' அணி சார்பில் கலீல் 4, கம்போஜ், தேஷ்பாண்டே தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா 'ஏ' அணிக்கு ஜெய்ஸ்வால் (5) ஏமாற்றினார். ராகுல் (51), கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (80) அரைசதம் கடந்தனர். கருண் நாயர் (15) நிலைக்கவில்லை.
ஆட்ட நேர முடிவில் இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 163/4 ரன் எடுத்து, 184 ரன் முன்னிலை பெற்றிருந்தது. துருவ் ஜுரெல் (6), நிதிஷ் குமார் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.