/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய பயிற்சியாளராகிறார் காம்பிர் * நேர்காணலில் பங்கேற்புஇந்திய பயிற்சியாளராகிறார் காம்பிர் * நேர்காணலில் பங்கேற்பு
இந்திய பயிற்சியாளராகிறார் காம்பிர் * நேர்காணலில் பங்கேற்பு
இந்திய பயிற்சியாளராகிறார் காம்பிர் * நேர்காணலில் பங்கேற்பு
இந்திய பயிற்சியாளராகிறார் காம்பிர் * நேர்காணலில் பங்கேற்பு
ADDED : ஜூன் 18, 2024 11:10 PM

புதுடில்லி: இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் காம்பிர் நியமிக்கப்பட உள்ளார். இதனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் இடம் பெறலாம்.
டி-20 உலக கோப்பை தொடருடன் பயிற்சியாளர் டிராவிட் பதவிக்காலம் முடிகிறது. புதிய பயிற்சியாளருக்கான நேர்காணலை, பி.சி.சி.ஐ., கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி (சி.ஏ.சி.னா) நேற்று நடத்தியது. டில்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து முன்னாள் வீரர் காம்பிர் 'ஜூம் கால்' மூலம் பங்கேற்றார். முன்னாள் வீரர் டபிள்யு.வி.ராமன், தனது திறமை குறித்த வீடியோ பதிவுகளை வழங்கினார். அன்னிய அணியை சேர்ந்த ஒருவரிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட உள்ளது. புதிய பயிற்சியாளராக காம்பிர் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணி பயிற்சியாளராக இருந்தவர் காம்பிர். இதனால் கோல்கட்டா கேப்டன் ஸ்ரேயாஸ் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பலாம். ஸ்ரேயாஸ், இஷான் கிஷான். ரஞ்சி கோப்பை தொடரை புறக்கணித்துவிட்டு, ஐ.பி.எல்., தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டனர். இதனால் கோபமடைந்த இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,), இவர்களை சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது. தவிர இந்திய அணியிலும் சேர்க்கப்படவில்லை.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., தரப்பில் ஒருவர் கூறியது:
உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடருக்காக ஜிம்பாப்வே செல்ல உள்ளது. இதற்கான இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்படும். இதில் அபிஷேக் சர்மா, ரியான் பராக், மயங்க் யாதவ், ஹர்சித் ராணா, நிதிஷ் குமார், வைஷாக், யாஷ் தயாள் என புதிய வீரர்கள் அதிகம் இடம் பெற உள்ளனர். அடுத்து இந்திய அணி, மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடருக்காக இலங்கை செல்லும். இதற்கான அணியில் ஸ்ரேயாஸ் மீண்டும் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.