ADDED : ஜூன் 17, 2024 10:57 PM

புதுடில்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் காம்பிர்.
இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் டிராவிட். 'டி-20' உலக கோப்பை தொடருடன் (ஜூன் 29) இவரது பதவி முடிகிறது. புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர் நியமிக்கப்பட உள்ளார். இவர், ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்கு கேப்டனாக இரு கோப்பை (2012, 2014), பயிற்சியாளராக ஒரு கோப்பை (2024) வென்று தந்தார். பா.ஜ., எம்.பி.,யாக இருந்த இவர், கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த அரசியலில் இருந்து விலகினார்.
நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார். அவர் வெளியிட்ட செய்தியில்,'சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். இவரது தலைமைப் பண்பில் நாட்டின் பாதுகாப்பு கூடுதல் பலம் பெறும்,' என தெரிவித்துள்ளார்.