/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சேலம் அணிக்கு முதல் வெற்றி: வீழ்ந்தது திண்டுக்கல்சேலம் அணிக்கு முதல் வெற்றி: வீழ்ந்தது திண்டுக்கல்
சேலம் அணிக்கு முதல் வெற்றி: வீழ்ந்தது திண்டுக்கல்
சேலம் அணிக்கு முதல் வெற்றி: வீழ்ந்தது திண்டுக்கல்
சேலம் அணிக்கு முதல் வெற்றி: வீழ்ந்தது திண்டுக்கல்
ADDED : ஜூலை 08, 2024 10:58 PM

சேலம்: விவேக் அரைசதம் விளாச சேலம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திண்டுக்கல் அணி ஏமாற்றம் அடைந்தது.
டி.என்.பி.எல்., 8வது சீசன் தற்போது சேலத்தில் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் திண்டுக்கல், சேலம் அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த திண்டுக்கல் அணிக்கு ஷிவம் சிங் (2), அஷ்வின் (6) ஏமாற்றினர். பின் இணைந்த விமல் குமார், கேப்டன் பாபா இந்திரஜித் ஜோடி நம்பிக்கை தந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது விமல் (47) 'ரன்-அவுட்' ஆனார். ஹரிஷ் குமார் வீசிய 14வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி விரட்டிய இந்திரஜித் (51) அரைசதம் கடந்தார். தினேஷ் ராஜ் (20) ஆறுதல் தந்தார்.
திண்டுக்கல் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது. சேலம் சார்பில் சன்னி சாந்து, ஹரிஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
விவேக் விளாசல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சேலம் அணிக்கு அபிஷேக், கவின் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. வருண் சக்ரவர்த்தி பந்தில் அபிஷேக் (28) அவுட்டானார். திரன் ஓவரில் ராஜேந்திரன் விவேக், 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். சந்தீப் வாரியர் பந்தில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டிய கவின் (46) நம்பிக்கை தந்தார்.
திரன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய விவேக் அரைசதம் கடந்து வெற்றியை உறுதி செய்தார். சேலம் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது. விவேக் (51), அத்னன் கான் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.