/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கோப்பை வென்றது இங்கிலாந்து: வெஸ்ட் இண்டீஸ் தோல்விகோப்பை வென்றது இங்கிலாந்து: வெஸ்ட் இண்டீஸ் தோல்வி
கோப்பை வென்றது இங்கிலாந்து: வெஸ்ட் இண்டீஸ் தோல்வி
கோப்பை வென்றது இங்கிலாந்து: வெஸ்ட் இண்டீஸ் தோல்வி
கோப்பை வென்றது இங்கிலாந்து: வெஸ்ட் இண்டீஸ் தோல்வி
ADDED : ஜூலை 28, 2024 11:48 PM

பர்மிங்காம்: பர்மிங்காம் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது. லார்ட்ஸ், நாட்டிங்காம் டெஸ்டில் ஏமாற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி 'ஹாட்ரிக்' தோல்வியடைந்தது.
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3வது டெஸ்ட் பர்மிங்காமில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 282, இங்கிலாந்து 376 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 33/2 ரன் எடுத்திருந்தது.
நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து 'வேகத்தில்' சரிந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 175 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. கவெம் ஹாட்ஜ் (55) ஆறுதல் தந்தார். இங்கிலாந்து சார்பில் மார்க் உட் 5 விக்கெட் சாய்த்தார்.
பின் 82 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (57*), டக்கெட் (25*) கைகொடுத்தனர். இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 87/0 ரன் எடுத்து வெற்றி பெற்றது.