Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தினேஷ் கார்த்திக் புதிய அவதாரம்

தினேஷ் கார்த்திக் புதிய அவதாரம்

தினேஷ் கார்த்திக் புதிய அவதாரம்

தினேஷ் கார்த்திக் புதிய அவதாரம்

ADDED : ஜூலை 01, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர், ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் விக்கெட்கீப்பர்-பேட்டர் தினேஷ் கார்த்திக், 39. சமீபத்தில் அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். கடந்த முறை ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக 'பினிஷர்' பணியை கச்சிதமாக செய்தார். 15 போட்டிகளில் 326 ரன் (சராசரி 36.22, ஸ்டிரைக் ரேட் 187.35) எடுத்தார். கோல்கட்டா, மும்பை, டில்லி, பஞ்சாப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். ஐ.பி.எல்., அரங்கில் 257 போட்டிகளில் 4, 842 ரன் எடுத்துள்ளார். சமீபத்திய 'டி-20' உலக கோப்பை தொடரில் வர்ணனையாளராக அசத்தினார். தற்போது பெங்களூ அணியின் பேட்டிங் பயிற்சியாளர், ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கூறுகையில்,''கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை துவங்குவதில் மகிழ்ச்சி. பெங்களூரு அணிக்கு பேட்டிங் பயிற்சி அளிக்க ஆர்வமாக உள்ளேன். பதட்டமான கட்டத்தில் சிறப்பாக செயல்படும் வித்தையை கற்றுக் கொடுக்க இருக்கிறேன். எனது அனுபவம், அணியின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும்,''என்றார்.

கடந்த 17 ஆண்டுகளாக போராடும் பெங்களூரு அணியால், கோப்பை வெல்ல முடியவில்லை. புதிய அவதாரம் எடுக்கும் கார்த்திக்கின் வரவு, கோலி கூட்டணிக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரட்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us