/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/திண்டுக்கல் அணி அசத்தல்: பூபதி குமார் அரைசதம்திண்டுக்கல் அணி அசத்தல்: பூபதி குமார் அரைசதம்
திண்டுக்கல் அணி அசத்தல்: பூபதி குமார் அரைசதம்
திண்டுக்கல் அணி அசத்தல்: பூபதி குமார் அரைசதம்
திண்டுக்கல் அணி அசத்தல்: பூபதி குமார் அரைசதம்
UPDATED : ஜூலை 17, 2024 11:56 PM
ADDED : ஜூலை 17, 2024 11:02 PM

கோவை: பூபதி குமார் அரைசதம் விளாச திண்டுக்கல் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 2வது வெற்றி பெற்றது.
தமிழகத்தில் டி.என்.பி.எல்., எட்டாவது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் திருப்பூர், திண்டுக்கல் அணிகள் மோதின. ஆனால் மழை காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது. தலா 13 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
திருப்பூர் அணிக்கு ராதாகிருஷ்ணன், துஷார் ரஹேஜா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய சந்தீப் வாரியர் 2 ரன் மட்டும் விட்டுக்கொடுத்தார். திரன் வீசிய 2வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த ரஹேஜா, வருண் சக்கரவர்த்தி பந்தில் வரிசையாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். சந்தீப் வாரியர் வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய ராதாகிருஷ்ணன், அஷ்வின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். முதல் விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்த போது அஷ்வின் 'சுழலில்' ராதாகிருஷ்ணன் (36) சிக்கினார். சுபோத் பந்தில் ரஹேஜா (32), கணேஷ் (0) அவுட்டாகினர். வருண் சக்கரவர்த்தி பந்தை சிக்சருக்கு அனுப்பிய அமித் சாத்விக், திரன் வீசிய 12வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். தொடர்ந்து அசத்திய சுபோத் பந்தில் அனிருத் (2) அவுட்டானார்.
திருப்பூர் அணி 13 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 108 ரன் எடுத்திருந்தது. அமித் சாத்விக் (28), கேப்டன் சாய் கிஷோர் (2) அவுட்டாகாமல் இருந்தனர். திண்டுக்கல் சார்பில் சுபோத் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பூபதி விளாசல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு ஷிவம் சிங் (4), விமல் குமார் (14) சுமாரான துவக்கம் கொடுத்தனர். பின் இணைந்த பாபா இந்திரஜித், பூபதி குமார் ஜோடி நம்பிக்கை தந்தது. சாய் கிஷோர் வீசிய 12வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர் விளாசிய பூபதி, 25 பந்தில் அரைசதம் கடந்து வெற்றியை உறுதி செய்தார்.
திண்டுக்கல் அணி 11.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 111 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பூபதி (51), இந்திரஜித் (31) அவுட்டாகாமல் இருந்தனர்.