/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கோவையை வீழ்த்தியது திண்டுக்கல்: பாபா இந்திரஜித் அபாரம்கோவையை வீழ்த்தியது திண்டுக்கல்: பாபா இந்திரஜித் அபாரம்
கோவையை வீழ்த்தியது திண்டுக்கல்: பாபா இந்திரஜித் அபாரம்
கோவையை வீழ்த்தியது திண்டுக்கல்: பாபா இந்திரஜித் அபாரம்
கோவையை வீழ்த்தியது திண்டுக்கல்: பாபா இந்திரஜித் அபாரம்
ADDED : ஜூலை 21, 2024 11:41 PM

திருநெல்வேலி: பாபா இந்திரஜித் 96 ரன் விளாச திண்டுக்கல் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணியை வீழ்த்தியது.
தமிழகத்தில், டி.என்.பி.எல்., 8வது சீசன் நடக்கிறது. திருநெல்வேலியில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' கோவை, திண்டுக்கல் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
கோவை அணிக்கு சுஜய் (8), சுரேஷ் குமார் (3), முகிலேஷ் (5) ஏமாற்றினர். சாய் சுதர்சன் 33, ராம் அரவிந்த் 25 ரன் எடுத்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் ஷாருக்கான் (51*), அதீக் உர் ரஹ்மான் (29*) கைகொடுத்தனர். கோவை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன் எடுத்தது. திண்டுக்கல் சார்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினார்.
சவாலான இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு விமல் குமார் (13) சுமாரான துவக்கம் கொடுத்தார். ஷிவம் சிங் (36) நம்பிக்கை தந்தார். பூபதி குமார் (0), கேப்டன் அஷ்வின் (0) ஏமாற்றினர். தனிநபராக அசத்திய பாபா இந்திரஜித், 49 பந்தில் 96* ரன் (5 சிக்சர், 11 பவுண்டரி) விளாசினார். முகமது பந்தை சிக்சருக்கு அனுப்பிய சுபோத் (7*) வெற்றியை உறுதி செய்தார்.
திண்டுக்கல் அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்து 3வது வெற்றியை பதிவு செய்தது.