Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/வார்னர் 'குட்-பை' * சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து...

வார்னர் 'குட்-பை' * சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து...

வார்னர் 'குட்-பை' * சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து...

வார்னர் 'குட்-பை' * சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து...

ADDED : ஜூன் 25, 2024 10:52 PM


Google News
Latest Tamil News
கிங்ஸ்டவுன்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார் டேவிட் வார்னர்.

ஆஸ்திரேலிய அணி துவக்க வீரர் டேவிட் வார்னர் 37. கடந்த 2009ல் 'டி-20' போட்டியில் (தென் ஆப்.,) அறிமுகம் ஆனார். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் ஒருவரான இவர், கடந்த 2023, உலக கோப்பை பைனலுடன் ஒருநாள் அரங்கில் (161 போட்டி, 6,932 ரன்) இருந்து விடைபெற்றார்.

பாகிஸ்தானுக்கு எதிராக சிட்னி போட்டியுடன் டெஸ்டில் (112ல் 8,786) இருந்து கிளம்பினார். தற்போது கடைசியாக 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்றார்.

இந்தியாவுக்கு எதிரான 'சூப்பர்-8' போட்டி, தனது கடைசியாக இருக்கும் என தெரியாத நிலையில், 6 ரன்னில் அவுட்டாகி சோகத்துடன் திரும்பினார்.

மறுபக்கம் ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தை சாய்க்க, ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது. வேறு வழியில்லாத நிலையில் 'டி-20' போட்டி உட்பட, தனது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மீண்டு வருவாரா

இதை சக வீரர் ஹேசல்வுட் உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில்,'' வார்னர் மூன்றுவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்கலாம். வரும் சாம்பியன்ஸ் டிராபி (2025, பாக்.,) தொடரில் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஒருவேளை அதில் வார்னர் பங்கேற்கலாம்,'' என்றார்.

49

வார்னர் டெஸ்ட் (26), ஒருநாள் (22), 'டி-20' (1) என மூன்றுவித கிரிக்கெட்டில் மொத்தம் 49 சதம் அடித்தார்.

3277

சர்வதேச 'டி-20'ல் அதிக ரன் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் வார்னர் (3277 ரன்). ஒட்டுமொத்தமாக 7வது இடத்தில் உள்ளார்.

18,995

வார்னர் மூன்று வித கிரிக்கெட்டிலும் சேர்த்து மொத்தம் 18,995 ரன் எடுத்துள்ளார்.

*** போட்டி ரன் சதம்/அரைசதம்

டெஸ்ட் 112 8,786 26/37

ஒருநாள் 161 6,932 22/33

'டி-20' 110 3,277 1/28





      Our Apps Available On




      Dinamalar

      Follow us