/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இங்கிலாந்து வெற்றி * ஜோ ரூட் புதிய சாதனைஇங்கிலாந்து வெற்றி * ஜோ ரூட் புதிய சாதனை
இங்கிலாந்து வெற்றி * ஜோ ரூட் புதிய சாதனை
இங்கிலாந்து வெற்றி * ஜோ ரூட் புதிய சாதனை
இங்கிலாந்து வெற்றி * ஜோ ரூட் புதிய சாதனை
ADDED : ஜூன் 02, 2025 10:51 PM

கார்டிப்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இங்கிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி கார்டிப்பில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (59), கேப்டன் ஹோப் (78) கைகொடுத்தனர். கீசி கார்டி 103 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 47.4 ஓவரில் 308 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து அணிக்கு ஸ்மித் (0), டக்கெட் (0) ஏமாற்ற, கேப்டன் ஹாரி புரூக் 47 ரன் எடுத்தார். வில் ஜாக்ஸ் (49) கைகொடுக்க, ஜோ ரூட் சதம் விளாசினார். இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் 312/7 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 2-0 என தொடரை கைப்பற்றியது. ஜோ ரூட் (166), ரஷித் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரூட் சாதனை
இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் (179 போட்டி, 7082 ரன்), டெஸ்டில் (153ல் 13,006 ரன்) அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் ஜோ ரூட். அடுத்த இடத்தில் இயான் மார்கன் (225 ஒருநாள் போட்டியில், 6957 ரன்), அலெஸ்டர் குக் (161 டெஸ்டில், 12,472) உள்ளனர்.