/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/டெஸ்ட் உலக சாம்பியன் யார்... * ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சைடெஸ்ட் உலக சாம்பியன் யார்... * ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை
டெஸ்ட் உலக சாம்பியன் யார்... * ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை
டெஸ்ட் உலக சாம்பியன் யார்... * ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை
டெஸ்ட் உலக சாம்பியன் யார்... * ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை
ADDED : ஜூன் 10, 2025 10:54 PM

லார்ட்ஸ்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இன்று துவங்குகிறது. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 2023-25 சீசனுக்கான புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பிடித்த தென் ஆப்ரிக்கா (69.44 சதவீதம்), ஆஸ்திரேலிய (67.54) அணிகள் பைனலுக்கு முன்னேறின. இந்திய அணி (50.00) மூன்றாவது இடம் பிடித்து வெளியேறியது.
இங்கிலாந்தின் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் இன்று பைனல் துவங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனாக (2021-23) களமிறங்குகிறது ஆஸ்திரேலியா. கவாஜா (1422 ரன்), டிராவிஸ் ஹெட் (1177) ஜோடி துவக்கம் தர, ஸ்மித் (1324), லபுசேன் (935), அலெக்ஸ் கேரி (954), புதிய வரவு கொன்ஸ்டாஸ், பேட்டிங்கில் பலம் சேர்க்கலாம்.
டெஸ்டில் 'பெஸ்ட்' பவுலிங் வரிசையில் 'டாப்-10' பட்டியலில் உள்ள ஆஸ்திரேலிய பவுலர்கள் 'சுழல்' லியான் (553 விக்., 3வது இடம்), ஸ்டார்க் (382, 4), கேப்டன் கம்மின்ஸ் (294, 8), ஹேசல்வுட் (279, 10) மிரட்ட காத்திருக்கின்றனர்.
தேறியது எப்படி
தென் ஆப்ரிக்க அணியை பொறுத்தவரையில் 1998ல் சாம்பியன்ஸ் டிராபி மட்டும் வென்றது. மற்றபடி ஐ.சி.சி., நடத்தும் எந்த தொடரிலும் சாதித்தது இல்லை.
எனினும் கடந்த இரு ஆண்டில் 30 வீரர்களை களமிறக்கி, சரியான பேட்டர்கள், பவுலர்களை கண்டறிந்து, கடைசியாக பங்கேற்ற 7 டெஸ்டிலும் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியுள்ளது.
அனுபவ மார்க்ரம் (572), உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 3வது சீசனில் தென் ஆப்ரிக்க அணிக்காக அதிக ரன் குவித்த 'மிடில் ஆர்டர்' வீரர் டேவிட் பெடிங்ஹாம் (645), 4வது இடத்தில் களமிறங்கும் கேப்டன் பவுமா (609) ரன் சேர்க்க உதவலாம்.
பவுலிங்கில் அனுபவ ரபாடா, லுங்கிடி, மார்கோ யான்சென், மஹாராஜ் கைகொடுக்கலாம்.
ரூ. 30.78 கோடி பரிசு
பைனலில் சாதித்து கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 30.78 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. தோற்கும் அணிக்கு ரூ. 18 கோடி தரப்பட உள்ளது. கடந்த 2023ல் வென்ற அணிக்கு ரூ. 13.70 கோடி, தோற்ற அணிக்கு ரூ. 6.84 கோடி தரப்பட்டன.