/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பைனலில் இந்திய அணி * மாஸ்டர்ஸ் லீக் தொடரில்...பைனலில் இந்திய அணி * மாஸ்டர்ஸ் லீக் தொடரில்...
பைனலில் இந்திய அணி * மாஸ்டர்ஸ் லீக் தொடரில்...
பைனலில் இந்திய அணி * மாஸ்டர்ஸ் லீக் தொடரில்...
பைனலில் இந்திய அணி * மாஸ்டர்ஸ் லீக் தொடரில்...
ADDED : மார் 14, 2025 11:23 PM

ராய்ப்பூர்: மாஸ்டர்ஸ் லீக் பைனலுக்கு இந்தியா முன்னேறியது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 94 ரன்னில் வீழ்த்தியது.
இந்தியாவில் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 'டி-20' கிரிக்கெட் முதல் சீசன் நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 6 அணிகளை சேர்ந்த ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கின்றனர். லீக் சுற்று முடிவில் இலங்கை (8 புள்ளி), இந்தியா (8), ஆஸ்திரேலியா (6), வெஸ்ட் இண்டீஸ் (6) அணிகள் 'டாப்-4' இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. தென் ஆப்ரிக்கா (2), இங்கிலாந்து (0) கடைசி இரு இடம் பிடித்து வெளியேறின.
சத்தீஷ்கரின் ராய்ப்பூரில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் வாட்சன் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
யுவராஜ் விளாசல்
இந்திய அணிக்கு அம்பதி ராயுடு (5), சச்சின் ஜோடி சுமார் துவக்கம் தந்தது. சச்சின் 30 பந்தில் 42 ரன் எடுத்தார். யுவராஜ் சிங் 30 பந்தில் 59 ரன் விளாச, பின்னி 36 ரன் எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 220/7 ரன் குவித்தது.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஷேன் வாட்சன் (5) கைவிட, ஷான் மார்ஷ், பென் டன்க் தலா 21 ரன் எடுத்தனர். பென் கட்டிங் அதிகபட்சம் 39 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் ஏமாற்ற ஆஸ்திரேலிய அணி 18.1 ஓவரில் 126 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ஷாபாஸ் நதீம் 4, வினய் குமார் 2, இர்பான் பதான் 2 விக்கெட் சாய்த்தனர். 94 ரன்னில் வெற்றி பெற்ற இந்திய அணி பைனலுக்கு (நாளை) முன்னேறியது.