/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ பாண்ட்யா எதிர்காலம்... * நழுவிய கேப்டன் வாய்ப்பு பாண்ட்யா எதிர்காலம்... * நழுவிய கேப்டன் வாய்ப்பு
பாண்ட்யா எதிர்காலம்... * நழுவிய கேப்டன் வாய்ப்பு
பாண்ட்யா எதிர்காலம்... * நழுவிய கேப்டன் வாய்ப்பு
பாண்ட்யா எதிர்காலம்... * நழுவிய கேப்டன் வாய்ப்பு
ADDED : ஜூலை 19, 2024 11:00 PM

புதுடில்லி: 'டி-20' உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் பாண்ட்யா. அடுத்த 3 வாரத்தில் இவரது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது.
'டி-20' உலக கோப்பை தொடரில் (வெ.இண்டீஸ்) இந்தியா சாம்பியன் ஆனது. பைனலில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு (30 பந்து 30 ரன்) அருகில் இருந்தது. அப்போது பந்து வீசிய துணைக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, கிளாசனை அவுட்டாக்கி, இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினார்.
பின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், இந்திய அணிக்கு தலைமை ஏற்க தயாராக இருந்தார். ஆனால் புதிய பயிற்சியாளர் காம்பிர் 'அட்வைசில்' சூர்யகுமார் 'டி-20' அணிக்கு கேப்டன் ஆனார். இதனால் விரக்தியில் உள்ளார் பாண்ட்யா.
ஐ.பி.எல்., சிக்கல்
கடந்த 2022ல் ரோகித்திடம் இருந்த இந்திய 'டி-20' கேப்டன் பதவி, பாண்ட்யாவுக்கு வழங்கப்பட்டது. 'இனி இந்தியா எதிர்காலம் இவர் தான்' என நினைத்த ஐ.பி.எல்., மும்பை அணி, நிர்வாகம், ரோகித்தை நீக்கவிட்டு பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது. ரசிகர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐ.பி.எல்., தொடரில் மும்பை கடைசி இடம் (10வது) பிடித்தது.
தற்போது 'டி-20' உலக கோப்பை வென்று தந்த ரோகித், மும்பை அணி தனது கேப்டன் பதவியை பறித்தது தவறு என நிரூபித்தார். இதனால் அடுத்த ஆண்டு வீரர்கள் ஏலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் ரோகித் விலக விரும்பினால் மும்பை என்ன செய்யும், அல்லது அவரை தக்கவைக்குமா, பாண்ட்யாவுக்கு எவ்வளவு தொகை தரும், இந்திய அணி புதிய கேப்டன் சூர்யகுமாருக்கு எவ்வளவு விலை கொடுத்து தக்கவைக்கும் என பல புதிர்கள் ஏற்பட்டுள்ளன.
மறுபக்கம் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும், மும்பை அணி கேப்டன் ஆக விரும்பலாம். எப்படி இருப்பினும், காம்பிரின் வருகையால் இந்தியா, ஐ.பி.எல்., தொடரில் பாண்ட்யா எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் (50 ஓவர்) பாண்ட்யா பங்கேற்க விரும்பினால், வரும் விஜய் ஹசாரே தொடரில் திறமை நிரூபித்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பரிதாபத்தில் ருதுராஜ்
பயிற்சியாளர் காம்பிர் வருகை இந்திய அணியில் புயலை கிளப்பியுள்ளது எனலாம். சூர்யகுமார் கேப்டன் ஆனது, ஜிம்பாப்வே மண்ணில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா, சகால், ஜடேஜா புறக்கணிப்பு, 'டி-20' உலக அணியில் 'ரிசர்வ்' பவுலராக இருந்த, ஜிம்பாப்வே தொடரில் அசத்திய அவேஷ் கான், முகேஷ் குமாருக்கு கல்தா, கோல்கட்டா அணியின் ஹர்ஷித் ராணாவை ஒருநாள் அணியில் சேர்த்தது என, சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் கழற்றி விடப்பட்டனர்.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது ருதுராஜ் தான். 2023 ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்தார். ஜிம்பாப்வே தொடரில் இவர் தான் கேப்டனாக இருப்பார் என நம்பப்பட்டது. மாறாக சுப்மன் கில் தலைமை ஏற்றார். 'டி-20', ஒருநாள் என இரு அணியிலும் கழற்றி விடப்பட்டுள்ளார்.
கடைசி 7 'டி-20' இன்னிங்சில் ருதுராஜ் 356 ரன் (சராசரி 39.56 ரன்) எடுத்துள்ளார். ஜெய்ஸ்வால் (263, 37.82), சுப்மன் (201, 29.70), சூர்யகுமார் (197, 43.33), பாண்ட்யா (158, 26.64) அடுத்தடுத்து உள்ளனர். இருப்பினும் ருதுராஜ் நீக்கப்பட்டது பரிதாபம் தான்.