ADDED : செப் 11, 2025 09:25 PM

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவராக 2022, அக்., முதல் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி இருந்தார். கடந்த ஜூலை மாதம் 70 வயதானதால், பி.சி.சி.ஐ., விதிப்படி இவரது பதவி முடிவுக்கு வந்தது. செப்., 28ல் நடக்கவுள்ள ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இதனிடையே இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் 52, பி.சி.சி.ஐ., தலைவராக உள்ளார் என செய்தி வெளியாகின.
இதற்கு மறுப்பு தெரிவித்து சச்சின் தரப்பில் வெளியான செய்தியில்,' பி.சி.சி.ஐ.,யின் புதிய தலைவராகப் போகிறார் சச்சின் என்ற ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம். அவற்றை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.