/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/துப்பாக்கி முனையில் கிரிக்கெட் வீரரிடம் கொள்ளைதுப்பாக்கி முனையில் கிரிக்கெட் வீரரிடம் கொள்ளை
துப்பாக்கி முனையில் கிரிக்கெட் வீரரிடம் கொள்ளை
துப்பாக்கி முனையில் கிரிக்கெட் வீரரிடம் கொள்ளை
துப்பாக்கி முனையில் கிரிக்கெட் வீரரிடம் கொள்ளை
ADDED : பிப் 06, 2024 10:23 PM

ஜோகனஸ்பர்க்: துப்பாக்கி முனையில் மிரட்டி வெஸ்ட் இண்டீஸ் வீரர் பேபியன் ஆலனிடம் இருந்து அலைபேசி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.
தென் ஆப்ரிக்காவில் ஐ.பி.எல்., பாணியிலான எஸ்.ஏ., 'டி-20' உள்ளூர் தொடர் நடக்கிறது. இதில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக வெஸ்ட் இண்டீஸ் 'ஆல்-ரவுண்டர்' பேபியன் ஆலன் 28, விளையாடுகிறார். இவரை, ஜோகனஸ்பர்க்கில் உள்ள சாண்ட்டன் சன் ஓட்டலுக்கு வெளியே கொள்ளையர்கள் மடக்கியுள்ளனர். துப்பாக்கி முனையில் மிரட்டி, இவரிடம் இருந்து பணம், அலைபேசி, பேக், உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர். இது வீரர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் ராஜஸ்தான் அணி தான் பார்ல் அணியை வாங்கியுள்ளது. பார்ல் அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,'பேபியன் ஆலனுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நலமாக உள்ளார். இன்று நடக்கும் 'எலிமினேடட்டர்' போட்டிக்காக சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வீரர்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்படும்,''என்றார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பேபியன் ஆலன், 20 ஒருநாள், 34 'டி-20' போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணிக்காக விளையாடியுள்ளார். முன்னணி வீரரான இவரிடம் நடந்த கொள்ளை சம்பவம் கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.