Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/2 ரன்னில் 'ஆல் அவுட்' * இங்கிலாந்து கிரிக்கெட்டில் வினோதம்

2 ரன்னில் 'ஆல் அவுட்' * இங்கிலாந்து கிரிக்கெட்டில் வினோதம்

2 ரன்னில் 'ஆல் அவுட்' * இங்கிலாந்து கிரிக்கெட்டில் வினோதம்

2 ரன்னில் 'ஆல் அவுட்' * இங்கிலாந்து கிரிக்கெட்டில் வினோதம்

Latest Tamil News
லண்டன்: இங்கிலாந்தில் மிடில்சக்ஸ் கவுன்டி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. வடக்கு லண்டன் மைதானத்தில் நடந்த மூன்றாவது 'டிவிஷன் லீக்' போட்டியில் ரிச்மண்ட், வடக்கு லண்டன் அணிகள் மோதின.

வடக்கு லண்டன் அணி 45 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 426 ரன் எடுத்தது. டேனியல் சிம்மன்ஸ் அதிகபட்சம் 140 ரன் எடுத்தார். 65 'வைடு, 16 'நோ பால்' உட்பட உதிரியாக 92 ரன்களை ரிச்மண்ட் அணி பவுலர்கள் விட்டுக் கொடுத்தனர்.

அடுத்து ரிச்மண்ட் அணி, 5.4 ஓவரில் 2 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டாம் பெட்ரைடு ஒரு ரன் எடுக்க, மற்றொரு ரன் 'வைடாக' கிடைத்தது. 10 வீரர்களில் 8 பேர் 'டக்' அவுட்டாகினர். வடக்கு லண்டன் அணியின் மாத்யூ ரோசன், ரன் எதுவும் கொடுக்காமல் 5 விக்கெட் சாய்த்தார்.

கிரிக்கெட் அரங்கில் 1810ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 'பி' அணி 6 ரன்னுக்கு சுருண்டது. இது, முதல் தர கிரிக்கெட்டில் பதிவான குறைந்த ஸ்கோர். 2022ல் விஜய் மெர்ச்சன்ட் (16 வயது) போட்டியில் சிக்கிம் அணி, 6 ரன்னுக்கு (எதிர்-ம.பி.,) சுருண்டு இருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us