/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஹர்மன்பிரீத், மந்தனா, தீப்தி 'டாப்' * வெளியானது சம்பள ஒப்பந்த பட்டியல் ஹர்மன்பிரீத், மந்தனா, தீப்தி 'டாப்' * வெளியானது சம்பள ஒப்பந்த பட்டியல்
ஹர்மன்பிரீத், மந்தனா, தீப்தி 'டாப்' * வெளியானது சம்பள ஒப்பந்த பட்டியல்
ஹர்மன்பிரீத், மந்தனா, தீப்தி 'டாப்' * வெளியானது சம்பள ஒப்பந்த பட்டியல்
ஹர்மன்பிரீத், மந்தனா, தீப்தி 'டாப்' * வெளியானது சம்பள ஒப்பந்த பட்டியல்

புதுடில்லி: பி.சி.சி.ஐ., பெண்களுக்கான சம்பள ஒப்பந்த பட்டியல் வெளியானது. ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி 'டாப்' பட்டியலில் இடம் பிடித்தனர்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் வீராங்கனைகளுக்கான புதிய சம்பள ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. இதில் 16 பேர் இடம் பெற்றுள்ளனர். 'ஏ', 'பி', 'சி' என மூன்று கிரேடு பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ. 50 லட்சம், ரூ. 30 லட்சம், ரூ. 10 லட்சம் தரப்படும்.
இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா ரூ. 50 லட்சம் பட்டியலில் இடம் பெற்றனர். வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா, 'ஆல் ரவுண்டர்' ஜெமிமா, விக்கெட் கீப்பர் ரிச்சா, துவக்க வீராங்கனை ஷைபாலி 'பி' கிரேடில் தொடர்கின்றனர்.
ராஜேஷ்வரி, மேஹ்னா, தேவிகா, அஞ்சலி, ஹர்லீன் உள்ளிட்டோர் புதிய பட்டியலில் இடம் பெறவில்லை.
சம்பள ஒப்பந்தம்
'ஏ' கிரேடு (ரூ. 50 லட்சம்): ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா.
'பி' கிரேடு (ரூ. 30 லட்சம்): ரேணுகா, ஜெமிமா, ரிச்சா, ஷைபாலி.
'சி' கிரேடு (ரூ. 10 லட்சம்): யஸ்திகா, ராதா, ஷ்ரேயாங்கா, திதாஸ், அருந்ததி, அமன்ஜோத், கவுர், உமா, ஸ்னே ராணா, பூஜா.