Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பராகுவேயை வென்றது பிரேசில் * கோபா கால்பந்தில் அபாரம்

பராகுவேயை வென்றது பிரேசில் * கோபா கால்பந்தில் அபாரம்

பராகுவேயை வென்றது பிரேசில் * கோபா கால்பந்தில் அபாரம்

பராகுவேயை வென்றது பிரேசில் * கோபா கால்பந்தில் அபாரம்

UPDATED : ஜூன் 29, 2024 07:57 PMADDED : ஜூன் 28, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
லாஸ் வேகாஸ்: கோபா கால்பந்து தொடரின் லீக் போட்டியில் பிரேசில் அணி, 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது.

அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. இதன் 'டி' பிரிவு லீக் போட்டியில் உலகத் தரவரிசையில் 4வதாக உள்ள பிரேசில் அணி, 58 வது இடத்தில் இருந்த பராகுவேயை சந்தித்தது. கோஸ்டாரிகாவுக்கு எதிரான முதல் போட்டியில் ஒரு கோல் கூட அடிக்காத பிரேசில், நேற்று சிறப்பாக செயல்பட்டது.

போட்டியின் 31வது நிமிடம் பிரேசில் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதை பாகுயட்டா, வீணடித்தார். இருப்பினும் அடுத்த 4வது நிமிடத்தில் பிரேசிலின் வினிசியஸ் (35 வது) முதல் கோல் அடித்தார். 43வது நிமிடம் சாவியோ ஒரு கோல் அடிக்க, முதல் பாதி 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் மீண்டும் அசத்தினார் வினிசியஸ். இம்முறை 45+5வது நிமிடம் மற்றொரு கோல் அடிக்க, முதல் பாதியில் பிரேசில் அணி 3-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி துவங்கியதும் பராகுவே வீரர் அல்தெரெட்டே (48வது நிமிடம்) கோல் அடித்தார். போட்டியின் 65 வது நிமிடம் பிரேசில் அணிக்கு மீண்டும் 'பெனால்டி' கிடைத்தது. இம்முறை பாகுயட்டா, சரியாக கோல் அடித்தார். முடிவில் பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

2 போட்டியில் தலா ஒரு வெற்றி, 'டிரா' செய்த பிரேசில், 4 புள்ளியுடன் 2வது இடம் பெற்று, காலிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. 2 போட்டியில் தோற்ற பராகுவே, தொடரில் இருந்து வெளியேறியது.

காலிறுதியில் கொலம்பியா

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் கொலம்பியா, கோஸ்டாரிகா மோதின. இதில் கொலம்பிய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பங்கேற்ற 2 போட்டியிலும் வென்ற கொலம்பியா, 6 புள்ளியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us