/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/லாகூரில் இந்தியா-பாக்., மோதல் * சம்மதம் தெரிவிக்குமா பி.சி.சி.ஐ.,லாகூரில் இந்தியா-பாக்., மோதல் * சம்மதம் தெரிவிக்குமா பி.சி.சி.ஐ.,
லாகூரில் இந்தியா-பாக்., மோதல் * சம்மதம் தெரிவிக்குமா பி.சி.சி.ஐ.,
லாகூரில் இந்தியா-பாக்., மோதல் * சம்மதம் தெரிவிக்குமா பி.சி.சி.ஐ.,
லாகூரில் இந்தியா-பாக்., மோதல் * சம்மதம் தெரிவிக்குமா பி.சி.சி.ஐ.,
ADDED : ஜூலை 03, 2024 10:42 PM

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு, பி.சி.சி.ஐ., இன்னும் அனுமதி தராமல் உள்ளது.
ஐ.சி.சி., சார்பில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் தரவரிசையில் 'டாப்-8' இடத்தில் உள்ள அணிகள் மட்டும் இதில் பங்கேற்கும்.
கடைசியாக 2017ல் இங்கிலாந்தில் நடந்த தொடரில் இந்திய அணி, பைனலில் பாகிஸ்தானிடம் தோற்றது. இதன் 9வது சீசன் 2025ல் பிப்., 19-மார்ச் 10ல் பாகிஸ்தானில் நடக்க உள்ளது.
இந்திய அணி, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்துடன் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளன. இத்தொடரின் முக்கிய போட்டி குறித்த விபரம் வெளியானது.
இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும், பாதுகாப்பு காரணங்களுக்கான லாகூரில் மட்டும் நடத்தப்பட உள்ளன. இதன் படி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மார்ச் 1ல் மோத உள்ளன.
இந்திய அணியை பொறுத்தவரையில், கடைசியாக 2008ல் இந்தியா, பாகிஸ்தான் சென்றது. இதன் பின் பாதுகாப்பு காரணங்களுக்காக, இதுவரை பாகிஸ்தான் சென்றது இல்லை.
தற்போது, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) மத்திய அரசு அனுமதி கொடுத்தால் தான், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக, பாகிஸ்தான் செல்ல முடியும். இதனால் இத்தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.