/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கடைசி பந்தில் பெங்களூரு வெற்றி: ரிச்சா கோஷ், மேகனா அரைசதம்கடைசி பந்தில் பெங்களூரு வெற்றி: ரிச்சா கோஷ், மேகனா அரைசதம்
கடைசி பந்தில் பெங்களூரு வெற்றி: ரிச்சா கோஷ், மேகனா அரைசதம்
கடைசி பந்தில் பெங்களூரு வெற்றி: ரிச்சா கோஷ், மேகனா அரைசதம்
கடைசி பந்தில் பெங்களூரு வெற்றி: ரிச்சா கோஷ், மேகனா அரைசதம்
ADDED : பிப் 24, 2024 11:03 PM

பெங்களூரு: உ.பி., அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் கடைசி பந்தில் அசத்திய பெங்களூரு அணி 2 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
இந்தியாவில் பெண்களுக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் 2வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, உ.பி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற உ.பி., அணி கேப்டன் அலிசா ஹீலி 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
பெங்களூரு அணிக்கு சோபி டிவைன் (1), கேப்டன் ஸ்மிருதி மந்தனா (13), எல்லிஸ் பெர்ரி (8) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய மேகனா (53), ரிச்சா கோஷ் (62) அரைசதம் கடந்தனர். பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்தது. மோலினக்ஸ் (9), ஸ்ரேயாங்கா (8) அவுட்டாகாமல் இருந்தனர். உ.பி., அணி சார்பில் ராஜேஷ்வரி 2 விக்கெட் சாய்த்தார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய உ.பி., அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி (5) ஏமாற்றினார். சோபனா ஆஷா 'சுழலில்' ரிந்தா (18), தஹ்லியா (22) சிக்கினர். ஸ்வேதா ஷெராவத் (31), கிரேஸ் ஹாரிஸ் (38) ஓரளவு கைகொடுத்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன் தேவைப்பட்டன. சோபி மோலினக்ஸ் பந்துவீசினார். முதல் 5 பந்தில் 6 ரன் கிடைத்தது. கடைசி பந்தில் சிக்சர் தேவைப்பட, 2 ரன் மட்டும் எடுக்கப்பட்டது.
உ.பி., அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 155 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பெங்களூரு சார்பில் சோபனா ஆஷா 5 விக்கெட் சாய்த்தார்.