/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இங்கிலாந்தை வென்றது ஆஸ்திரேலியா: 'டி-20' உலக கோப்பையில்இங்கிலாந்தை வென்றது ஆஸ்திரேலியா: 'டி-20' உலக கோப்பையில்
இங்கிலாந்தை வென்றது ஆஸ்திரேலியா: 'டி-20' உலக கோப்பையில்
இங்கிலாந்தை வென்றது ஆஸ்திரேலியா: 'டி-20' உலக கோப்பையில்
இங்கிலாந்தை வென்றது ஆஸ்திரேலியா: 'டி-20' உலக கோப்பையில்
ADDED : ஜூன் 10, 2024 12:11 AM

பிரிட்ஜ்டவுன்: ஆஸ்திரேலிய அணி 36 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுனில் நடந்த 'டி-20' உலக கோப்பை 'பி' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, 'நடப்பு சாம்பியன்' இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் (39), டிராவிஸ் ஹெட் (34) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. கேப்டன் மிட்சல் மார்ஷ் (35), மேக்ஸ்வெல் (28), ஸ்டாய்னிஸ் (30) கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 201 ரன் குவித்தது. மாத்யூ வேட் (17) அவுட்டாகாமல் இருந்தார்.
சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (37), கேப்டன் பட்லர் (42) ஜோடி நம்பிக்கை தந்தது. வில் ஜாக்ஸ் (10), பேர்ஸ்டோவ் (7) சோபிக்கவில்லை. மொயீன் அலி (25), ஹாரி புரூக் (20*) ஓரளவு கைகொடுத்தனர். லிவிங்ஸ்டன் (15) நிலைக்கவில்லை.
இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ், ஜாம்பா தலா 2 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை ஜாம்பா வென்றார்.
முதல் போட்டியில் ஓமனை வீழ்த்திய ஆஸ்திரேலியா, தொடர்ந்து 2வது வெற்றி பெற்றது.