/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/இரண்டாவது சுற்றில் ஸ்ரீகாந்த்: தாய்லாந்து பாட்மின்டனில் முன்னேற்றம்இரண்டாவது சுற்றில் ஸ்ரீகாந்த்: தாய்லாந்து பாட்மின்டனில் முன்னேற்றம்
இரண்டாவது சுற்றில் ஸ்ரீகாந்த்: தாய்லாந்து பாட்மின்டனில் முன்னேற்றம்
இரண்டாவது சுற்றில் ஸ்ரீகாந்த்: தாய்லாந்து பாட்மின்டனில் முன்னேற்றம்
இரண்டாவது சுற்றில் ஸ்ரீகாந்த்: தாய்லாந்து பாட்மின்டனில் முன்னேற்றம்
ADDED : ஜன 31, 2024 05:36 PM

பாங்காக்: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டன் 2வது சுற்றுக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த், சங்கர், மிதுன், மாளவிகா உள்ளிட்டோர் முன்னேறினர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனதைபேயின் டிசூ வெய் வாங் மோதினர். அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த் 22-20, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சங்கர் முத்துசாமி சுப்ரமணியன் 21-14, 21-17 என மலேசியாவின் ஜூன் ஹாவ் லியோங்கை வென்றார். இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத் 21-17, 21-8 என ஹாங்காங்கின் ஜேசன் குனவானை தோற்கடித்தார்.
மற்றொரு இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் காயத்தால் பாதியில் விலகினார். இதனையடுத்து சீனாவின் லான் ஜி லீ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், பெருவின் இனெஸ் லுாசியா காஸ்டிலோ சலாஜர் மோதினர். இதில் அசத்திய மாளவிகா 22-20, 21-8 என வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா 21-10, 21-16 என மலேசியாவின் லிங் சிங் வோங்கை தோற்கடித்தார்.