/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/சாதிப்பாரா பிரனாய்: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில்சாதிப்பாரா பிரனாய்: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில்
சாதிப்பாரா பிரனாய்: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில்
சாதிப்பாரா பிரனாய்: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில்
சாதிப்பாரா பிரனாய்: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில்
ADDED : ஜூன் 10, 2024 10:47 PM

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில் இந்தியாவின் பிரனாய் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிட்னியில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் இன்று துவங்குகிறது. ஆண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் பிரனாய், சமீர் வர்மா, கிரண் ஜார்ஜ், சங்கர் முத்துசாமி சுப்ரமணியன், ரவி பங்கேற்கின்றனர்.
பெண்கள் ஒற்றையரில் ஆகார்ஷி காஷ்யப், அஷ்மிதா, அனுபமா, மாளவிகா பன்சோத், சமியா இமாத் பரூக்கி களமிறங்குகின்றனர். ஆண்கள் இரட்டையரில் இந்திய ஜோடி பங்கேற்கவில்லை. பெண்கள் இரட்டையரில் ருதுபர்னா-ஸ்வேதாபர்னா, ஹர்ஷிதா-ஸ்ருதி ஜோடிகள் களமிறங்குகின்றனர்.
கலப்பு இரட்டையரில் சுமீத் ரெட்டி-சிக்கி ரெட்டி, தருண்-ஸ்ரீ கிருஷ்ண பிரியா, ஆயுஷ் ராஜ் குப்தா-ஸ்ருதி என 3 இந்திய ஜோடிகள் விளையாடுகின்றன.
கடந்த 2014, 2016ல் இந்தியாவின் செய்னா நேவல், 2017ல் இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அதன்பின் எந்த ஒரு பிரிவிலும் இந்திய நட்சத்திரங்கள் சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இம்முறை இந்திய வீரர், வீராங்கனைகள் சாம்பியன் பட்டம் வெல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.