/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/இந்தோனேஷிய பாட்மின்டன்: சிந்து தோல்விஇந்தோனேஷிய பாட்மின்டன்: சிந்து தோல்வி
இந்தோனேஷிய பாட்மின்டன்: சிந்து தோல்வி
இந்தோனேஷிய பாட்மின்டன்: சிந்து தோல்வி
இந்தோனேஷிய பாட்மின்டன்: சிந்து தோல்வி
ADDED : ஜூன் 05, 2024 10:36 PM

ஜகார்த்தா: இந்தோனேஷிய பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து தோல்வியடைந்தார்.
இந்தோனேஷியாவில், 'மாஸ்டர்ஸ் 1000' அந்தஸ்து பெற்ற சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, சீனதைபேயின் வென் சி ஹ்சு மோதினர். முதல் செட்டை 15-21 என இழந்த சிந்து, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-15 எனக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஏமாற்றிய இவர் 14-21 எனக் கோட்டைவிட்டார். முடிவில் சிந்து 15-21, 21-15, 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 18-21, 6-21 என தாய்லாந்தின் ரட்சனோக்கிடம் தோல்வியடைந்தார்.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ, அஷ்வினி பொன்னப்பா ஜோடி 21-15, 21-15 என கனடாவின் ஜாக்கி டென்ட், கிரிஸ்டல் லாய் ஜோடியை வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில் ருதபர்னா, ஸ்வேதபர்னா ஜோடி 12-21, 9-21 என தென் கொரியாவின் கிம் சோ யோங், காங் ஹீ யோங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.