Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/அரையிறுதியில் தான்வி, ஆயுஷ் * யு.எஸ்.ஓபன் பாட்மின்டனில்...

அரையிறுதியில் தான்வி, ஆயுஷ் * யு.எஸ்.ஓபன் பாட்மின்டனில்...

அரையிறுதியில் தான்வி, ஆயுஷ் * யு.எஸ்.ஓபன் பாட்மின்டனில்...


ADDED : ஜூன் 28, 2025 10:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 10:30 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்: அமெரிக்காவில் யு.எஸ்.ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் 16 வயது தான்வி சர்மா, மலேசியாவின் லெட்சன்னாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 21-13 என கைப்பற்றிய தான்வி, அடுத்த செட்டையும் 21-16 என வசப்படுத்தினார். முடிவில் தான்வி, 21-13, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்திய வீரர் ஆயுஷ், 2022ல் ஜூனியர் உலக சாம்பியன் ஆன தைவானின் குவோ குவான் லினை சந்தித்தார். முதல் செட்டில் 18-20 என பின்தங்கிய ஆயுஷ், பின் 22-20 என கைப்பற்றினார். தொடர்ந்து அடுத்த செட்டையும் எளிதாக (21-9) கைப்பற்றினார். முடிவில் ஆயுஷ் 22-20, 21-9 என வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் அம்சகருணன், ரெத்தினசபாபதி ஜோடி 21-9, 21-19 என தைவானின் சீயன் வெய் சியாங், ஹிசுவான் ஹியு ஜோடியிடம் தோல்வியடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us