/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/ஹரிஹரன் ஜோடி கலக்கல் * துருக்கி பாட்மின்டனில்...ஹரிஹரன் ஜோடி கலக்கல் * துருக்கி பாட்மின்டனில்...
ஹரிஹரன் ஜோடி கலக்கல் * துருக்கி பாட்மின்டனில்...
ஹரிஹரன் ஜோடி கலக்கல் * துருக்கி பாட்மின்டனில்...
ஹரிஹரன் ஜோடி கலக்கல் * துருக்கி பாட்மின்டனில்...
ADDED : அக் 13, 2025 11:14 PM

இஸ்தான்புல்: துருக்கி சர்வதேச பாட்மின்டனில் இந்தியாவின் ஹரிஹரன், அர்ஜுன் ஜோடி சாம்பியன் ஆனது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன் (தமிழகம்), அர்ஜுன் (கேரளா) ஜோடி, ஜப்பானின் யுடோ நோடா, ஷுன்யா ஓடா ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 21-13 என கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, 21-6 என எளிதாக வசப்படுத்தியது. 29 நிமிடம் மட்டும் நடந்த பைனலில் அசத்திய இந்திய ஜோடி 21-13, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.
திரீஷா அபாரம்
கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன், திரீஷா ஜோடி, இந்தோனேஷியாவின் நாஹ்யா முக்யிபா, நவாப் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 21-14 என வென்ற இந்திய ஜோடி அடுத்த செட்டை 18-21 என இழந்தது. மூன்றாவது, கடைசி செட்டை இந்திய ஜோடி 21-11 என எளிதாக கைப்பற்றியது. 52 நிமிடம் நடந்த பைனலில் இந்திய ஜோடி 21-14, 18-21, 21-11 என வென்று தங்கம் கைப்பற்றியது.


