/செய்திகள்/விளையாட்டு/பாட்மின்டன்/ஆஸ்திரேலிய பாட்மின்டன்: பிரனாய் ஏமாற்றம்ஆஸ்திரேலிய பாட்மின்டன்: பிரனாய் ஏமாற்றம்
ஆஸ்திரேலிய பாட்மின்டன்: பிரனாய் ஏமாற்றம்
ஆஸ்திரேலிய பாட்மின்டன்: பிரனாய் ஏமாற்றம்
ஆஸ்திரேலிய பாட்மின்டன்: பிரனாய் ஏமாற்றம்
ADDED : ஜூன் 14, 2024 11:58 PM

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் காலிறுதியில் இந்தியாவின் பிரனாய், சமீர் வர்மா, ஆகர்ஷி காஷ்யப் தோல்வியடைந்தனர்.
சிட்னியில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் பிரனாய், ஜப்பானின் கொடாய் நரோகா மோதினர். இதில் ஏமாற்றிய பிரனாய் 19-21, 13-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சமீர் வர்மா, சீனதைபேயின் லின் சுன்-யி மோதினர். இதில் சமீர் 12-21, 13-21 என தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 17-21, 12-21 என சீனதைபேயின் பை யு போவிடம் வீழ்ந்தார்.
கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சுமித், சிக்கி ரெட்டி ஜோடி 12-21, 14-21 என சீனாவின் ஜியாங் ஜென் பாங், வெய் யா ஜின் ஜோடியிடம் தோல்வியடைந்தது.