
கருப்பு : ஒரு எடிட்டருக்கு முதல் முறையாக கார் பரிசு
அவர்களுக்கு அடுத்து படத்தின் எடிட்டர் கலைவாணன், அதே ரக கார் ஒன்றுடன் புகைப்படத்தைப் பதிவிட்டு, "கடவுளின் செயல், சூர்யா அண்ணா நன்றி, எங்கள் ரோலக்ஸிடமிருந்து லைப் டைம் செட்டில்மென்ட்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அவருக்கு படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, “ஒரு ஹீரோவிடமிருந்து முதல் முறையாக ஒரு எடிட்டர் பரிசு பெற்றுள்ளார்,” என்று நாயகன் சூர்யாவுக்கும் நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார்.
பொதுவாக ஒரு படம் பெரும் வெற்றி பெற்றால் படத்தின் இயக்குனருக்குத்தான் கார் பரிசு அளிப்பார்கள். ஆனால், இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் ஆகியோருக்கும் பரிசளித்துள்ளார்கள்.
இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கு அடுத்து பரிசு காத்திருக்கிறது, அது என்ன என்பது கூடிய சீக்கிரம் தெரிந்துவிடும்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!