ADDED : பிப் 11, 2024 02:25 AM

புதுச்சேரி: காங்., முன்னாள் தலைவர் ராகுலை அவமதித்த பா.ஜ., வினரை கண்டித்து புதுச்சேரி இளைஞர் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காமராஜர் சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இளைஞர் காங்., தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஏ.ஐ.சி.சி., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், வழக்கறிஞர் பிரிவு தலைவர் மருது பாண்டியன், மாநில பொதுச் செயலாளர் திருமுருகன், காங்., சிறப்பு அழைப்பாளர்கள் ஏம்பலம் மோகன்தாஸ், ராஜேந்திரன், பரந்தாமன், ராஜா குமார், வினோத், சுந்தர், ராஜா, வெங்கட் உட்பட பலர் பலர் பங்கேற்றனர்.