ADDED : செப் 03, 2025 07:17 AM
புதுச்சேரி : காட்டேரிக்குப்பம் அடுத்த குமாரபாளையத்தில் கடந்த மாதம் பைக் திருடு போனது.
காட்டேரிகுப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், சென்னை, வெள்ளனுார் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த மணிமாறன், 38, என்பவர் பைக்கை திருடியது தெரிய வந்தது. அவரை, கைது செய்து, அவரிடம் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.