/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாரியில் பேட்டரி திருடிய வாலிபர் கைது லாரியில் பேட்டரி திருடிய வாலிபர் கைது
லாரியில் பேட்டரி திருடிய வாலிபர் கைது
லாரியில் பேட்டரி திருடிய வாலிபர் கைது
லாரியில் பேட்டரி திருடிய வாலிபர் கைது
ADDED : ஜூன் 05, 2025 01:51 AM

திருபுவுனை; திருபுவனை அருகே லாரியில் பேட்டரி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாண்டார்கோவில், சிவன் கோவில் வீதியை சேர்ந்தவர் பரசுராமன், 41; லாரி டிரைவர். இவர் தனது லாரியில், அருகில் உள்ள இந்திய உணவுக் கழக குடோனில் வாடகைக்கு அரிசி மூட்டைகள், ஏற்றி இறக்கும் பணி செய்து வருகிறார்.
கடந்த மாதம் 18ம் தேதி குடோன் எதிரே உள்ள திரவுபதி அம்மன் கோவில் முன், லாரியை நிறுத்தியிருந்தபோது, அதில் இருந்த இரண்டு பேட்டரிகள் திருடு போனது. புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். நேற்று முன்தினம் இரவு திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக ஸ்கூட்டரில் நிற்காமல் சென்ற வாலிபரை போலீசார், விரட்டிப் பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் லாரி பேட்டரி ஒன்று இருந்தது. விசாரணையில் அவர், விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு, மோட்சகுளம் காலனி காளி மகன் மூர்த்தி, 29, என்பதும், திருவாண்டார்கோவிலில் லாரியில் 2 பேட்டரிகளையும், ஏரிப்பாக்கம் பகுதியில் ஒரு லாரியில் இரண்டு பேட்டரிகளையும் திருடியதும், அதில் ஒரு பேட்டரியை திருபுவனை தொழிற்சாலை பகுதியில் லாரி டிரைவரிடம் விற்பதற்கு எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்து, புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.