ADDED : மார் 22, 2026 08:35 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காலப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பெரிய முதலியார்சாவடி பகுதியைச் சேரந்த ஆறுமுகம், 42, என்பவர் மதுபோதையில் சின்ன காலப்பட்டு திடீர் நகர் மைதானத்தில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.





