/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆரோக்கியமான வாழ்வுக்கு யோகா அவசியம்: ரங்கசாமி ஆரோக்கியமான வாழ்வுக்கு யோகா அவசியம்: ரங்கசாமி
ஆரோக்கியமான வாழ்வுக்கு யோகா அவசியம்: ரங்கசாமி
ஆரோக்கியமான வாழ்வுக்கு யோகா அவசியம்: ரங்கசாமி
ஆரோக்கியமான வாழ்வுக்கு யோகா அவசியம்: ரங்கசாமி
ADDED : ஜூன் 22, 2025 12:56 AM
புதுச்சேரி : முனிவர்கள், சித்தர்கள் நம்முடைய ஆரோக்கியத்திற்காக கொடுத்தது தான் யோகா கலை என,முதல்வர் ரங்கசாமி பேசினார்.
புதுச்சேரி கடற்கரையில் நடந்த, சர்வதேச யோக தினவிழாவில், அவர், பேசியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் பல ஆண்டுகளாக சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம். யோகா என்பது ஒரு கலையாகும்.
இந்த கலை நமது நாட்டிற்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது.
முனிவர்கள் யோகா கலையை நமக்கு கொடுத்துள்ளனர். ஆரோக்கியமான வாழ்விற்கு இந்த கலை முக்கியமானதும், அவசியமான ஒன்றாகவும் இருக்கிறது.பிரதமர் மோடி எடுத்து முயற்சியின் காரணமாக, யோகா கலை உலக நாடுகளில் வெற்றிப்பெற்றுள்ளது.
உலகின் அனைத்து நாடுகளிலும் கொண்டாடும் விழாவாக தற்போது யோகா கலை உள்ளது. தமிழகத்தில் எத்தனையோ முனிவர்கள் யோகா கலையை வளர்த்து கொண்டிருக்கின்றனர்.
முனிவர்கள், சித்தர்கள் நம்முடைய ஆரோக்கியமான வாழ்விற்காக கொடுத்தது தான் யோகா கலையாகும்.
நமது மனம் அமைதியோடு இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்க முடியும். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்குமனதை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் நிலையில் யோகா கலை இருக்கிறது.
யோகா கலையை கற்பவர்கள் ஆரோக்கியமாகவும், வயது தெரியாமல் இருக்கும் நிலையை, நாம் பார்க்க முடிகிறது.நோயற்ற வாழ்விற்கு யோகா அவசியாக ஒன்றாக இருக்கிறது.வெளிநாடுகளில் இருந்து நிபுணர்கள், அறிஞர்கள் என, பலர் யோகா கலையை கற்று செல்கின்றனர். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.