/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜூன் 02, 2025 10:48 PM

புதுச்சேரி: லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடந்தது.
பெண் சுகாதார மேற்பார்வையாளர் ராதா முத்து வரவேற்றார். சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிகள் ரூமனோ, சிந்துஜ பிரியா, சுகாதார ஆய்வாளர் லில்லி முன்னிலை வகித்தனர். நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி பத்மினி உலக புகையிலை எதிர்ப்பு தினம் குறித்தும், கருப்பொருள் குறித்தும் பொதுமக்கள் மாணவர்களிடையே உரையாற்றினார். புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழியை மருத்துவ அதிகாரி யுவராஜ் வாசிக்க அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து உலகப் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை பொறுப்பு மருத்துவ அதிகாரி பத்மினி கொடியசதைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணி லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் சுகாதார நிலையத்திற்கு வந்தடைந்தது.
பேரணியில் புகையிலை பயன்பாட்டிற்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பினர். ஏற்பாடுகளை நிலைய சுகாதார ஊழியர்கள் செய்திருந்தனர்.
காசநோய் சிறப்பு துணை சுகாதார செவிலியர் மீரா நன்றி கூறினார்.