ADDED : ஜூன் 06, 2025 07:22 AM
புதுச்சேரி; புதுச்சேரி விவேகானந்தா கல்வியியல் கல்லுாரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் டாக்டர் சிங்காரவேலு தலைமை தாங்கி, ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்ப்பதன் அவசியம் குறித்தும், எதிர்கால ஆசிரியர்களானதங்கள் பள்ளிகள் மற்றும் சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்கும் துாதர்களாக செயல்பட வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கல்லுாரி வளாகத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும் உறுதிமொழிஎடுத்துக் கொண்டனர். இந்திய அளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் கடுமையான விளைவுகள் மற்றும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்க ஆவணப்படம் திரையிடப்பட்டது.