/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அடல் டிங்கரிங் ஆய்வகங்களை மேம்படுத்துவது குறித்த பயிலரங்கம்அடல் டிங்கரிங் ஆய்வகங்களை மேம்படுத்துவது குறித்த பயிலரங்கம்
அடல் டிங்கரிங் ஆய்வகங்களை மேம்படுத்துவது குறித்த பயிலரங்கம்
அடல் டிங்கரிங் ஆய்வகங்களை மேம்படுத்துவது குறித்த பயிலரங்கம்
அடல் டிங்கரிங் ஆய்வகங்களை மேம்படுத்துவது குறித்த பயிலரங்கம்
ADDED : ஜன 25, 2024 04:30 AM

புதுச்சேரி : தேசிய ஸ்டார்ட் அப் தினத்தையொட்டி, புதுச்சேரி அடல் இன்குபேஷன் சென்டர்,தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சார்பில் புதுச்சேரியில் அடல் டிங்கரிங் ஆய்வகங்களை மேம்படுத்துவது குறித்த சிறப்பு பயிலரங்கம் நடந்தது.
முதன்மை செயல் அதிகாரி விஷ்ணு வரதன் நோக்கவுரையாற்றினார். நிர்வாக இயக்குனர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கி, பேசுகையில், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புத்தாக்கத்தை மேம்படுத்துவதற்கான அடல் கண்டுபிடிப்பு இயக்கம் என்ற முதன்மை முயற்சி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதில், அடல் டிங்கரிங் ஆய்வகம், அடல் தொழில் ஊக்குவிப்பு மையம், அடல் சமுதாய புத்தாக்க மையம் ஆகிய மூன்று கட்டமைப்புகள் உள்ளன. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அடல் இன்குபேஷன் சென்டர், அடல் டிங்கரிங் ஆய்வகம் அமைந்துள்ளது' என்றார்.
விழாவில் பள்ளிக் கல்வி இயக்குனர் பிரியதர்ஷினி, பேசுகையில், நாட்டின் முன்னேற்றத்தில் அடல் கண்டுபிடிப்பு இயக்கம் முக்கிய பங்காற்றி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற தொழில்நுட்ப புதுமைகள் வரலாற்று ரீதியாக வெற்றியை பெற்றன.
புதுச்சேரியில் உள்ள பள்ளிகள், அடல் இன்குபேஷன் சென்டர், அடல் டிங்கரிங் ஆய்வகம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு அவசியம் இருக்க வேண்டும்' என்றார்.
பள்ளி கல்வித் துறை இணை இயக்குனர் சிவகசாமி, நிர்வாக அதிகாரி ராஜகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.