/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
ADDED : ஜூன் 14, 2025 07:03 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநில உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு அமைப்புக் கூட்டம், முதலியார்பேட்டை சி.ஐ.டி.யூ., அலுவலகத்தில் நடந்தது.
சி.ஐ.டி.யூ., வில் இணைக்கப்பட்ட சங்கங்களின் பெண் பிரதிநிதிகள் மாநில, மத்திய அரசு துறைகளில் பணிபுரியும் பெண் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாநில உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு அமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக லாவண்யா, துணை ஒருங்கிணைப்பாளர்களாக மின்னலா, அன்பரசி ஜூலியட், கண்ணம்மா, மீன்விழி, அருணா, சுமதி, சிவசங்கரி, வெங்கடேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய, மாநில, பொதுத்துறை அலுவலகங்கள், தனியார் துறை மற்றும் தொழிற்சாலைகள், பள்ளி, கல்லுாரிகள் என, பெண்கள் பணி புரியும் அனைத்து பணியிடங்களிலும் விசாகா கமிட்டி பரிந்துரை அடிப்படையில் புகார் கமிட்டி அமைக்க வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும் . ஆண், பெண் பாரபட்சமின்றி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சி.ஐ.டி.யூ., மாநில செயலாளர் சீனுவாசன், மாநில தலைவர் பிரபுராஜ், துணை தலைவர் கொளஞ்சியப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.