ADDED : செப் 02, 2025 10:04 PM
காரைக்கால்; காரைக்காலில் தோள்பட்டை வலியால் அவதிப்பட்ட கூலி தொழிலாளி மனவேதனையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
காரைக்கால் நிரவி ஊழியபத்து புதுதெருவை சேர்ந்த ஜோதி 71 இவர் மரம் ஏறும் தொழில் செய்து வந்தார்.கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு மரம் ஏறும் பொழுது கீழே விழுந்தததால் அடிக்கடி வலி ஏற்பட்ட வந்தது.
இந்நிலையில் தோள்பட்டை வலியால் கையை துாக்க முடியவில்லை என்று தனது மனைவி மற்றும் மகனிடம் ஜோதி தெரிவித்துள்ளார். வலியால் மனமுடைந்த அவர் மாடியில் மூங்கில் கம்பியில் துாக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டார். பின்னர் அவரை மீட்டு அரசு மருந்துவனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்து விட்டதாக மருந்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.