ADDED : மே 30, 2025 04:44 AM
புதுச்சேரி; புதுச்சேரி, வினோபா நகரை சேர்ந்தவர் ஜான் பப்பிஸ், 47. கூலி தொழிலாளி.
இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருந்து சாப்பிட்டும், அவருக்கு உடல்நிலை சரியாகமல் இருந்தது. அதனால், மனமுடைந்த அவர் 27 ம் தேதி வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, டி.நகர்., போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.