Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

ADDED : மார் 18, 2025 04:29 AM


Google News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, சாரம், மொட்டதோப்பை சேர்ந்தவர் ராகவேல், 50; மர கதவுகளுக்கு பாலீஷ் போடும் வேலை செய்து வந்தார். இவருக்கு, புவனேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

குடிப்பழக்கம் உடைய ராகவேல், உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த 4 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டின் பாத்ரூமில் ராகவேல் மயங்கி கிடந்தார். இதையடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு, கதிகாமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின்பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.