Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி

அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி

அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி

அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி

அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி

ADDED : ஆக 28, 2025 02:05 AM


Google News
புதுச்சேரி: அதிகமாக மது குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தா்.

அரியூர் பாரதி நகரை சேர்ந்தவர் வடிவேல் 45, கொத்தனார். குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆனந்தரபுரம் சாலையில் உள்ள சாராயக்கடையில் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.

அவரை மகன்கள் மீட்டு அரியூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மாலை இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி வள்ளி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.