/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருநள்ளாறு நளன் குளத்தில் துணிகள் அகற்றும் பணி துவக்கம் திருநள்ளாறு நளன் குளத்தில் துணிகள் அகற்றும் பணி துவக்கம்
திருநள்ளாறு நளன் குளத்தில் துணிகள் அகற்றும் பணி துவக்கம்
திருநள்ளாறு நளன் குளத்தில் துணிகள் அகற்றும் பணி துவக்கம்
திருநள்ளாறு நளன் குளத்தில் துணிகள் அகற்றும் பணி துவக்கம்
ADDED : மார் 10, 2026 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நளன் குளத்தில் பக்தர்கள் விட்டுச் சென்ற துணிகளை அகற்றும் பணி துவங்கியுள்ளது.
காரைக்கால், திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனிச் சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் நேற்று முன்தினம் சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடந்தது.
இந்நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள், சனீஸ்வரரை தரிசிப்பதற்கு முன், நளன் குளத்தில் நீராடி விட்டு, தாங்கள் அணிந்திருந்த துணிகளை குளத்திலேயே கழற்றி விட்டு, புதிய ஆடை அணிந்து கோவிலுக்கு சென்றனர்.
நளன் குளத்தில் பக்தர்கள் விட்டுச் சென்ற ஆடைகளை ஊழியர்கள் அகற்றி, மூட்டை மூட்டையாக வாகனங்களில் அனுப்பி வருகின்றனர்.


