/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பது பெண்களே' 'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பது பெண்களே'
'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பது பெண்களே'
'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பது பெண்களே'
'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பது பெண்களே'
ADDED : ஜூன் 07, 2025 10:25 PM

புதுச்சேரி : 'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பது பெண்களே' என்று பட்டிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், 'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பது ஆண்களா, பெண்களா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் கடற்கரை காந்தி திடலில் நடந்தது. பட்டிமன்ற குழுவினரை புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
'ஆண்களே' என்ற தலைப்பில் பழனி, லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 'பெண்களே' என்ற தலைப்பில் அறந்தாங்கி நிஷா, லலிதா, ஆதவன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இறுதியில், 'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பது பெண்களே' என்று நடுவர் கலக்கல் காங்கேயன் தீர்ப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அறிவியல் அதிகாரி ஆல்பர்ட், பொறியாளர் காளமேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.