Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரூ. 1,000 உதவி தொகை கேட்டு அரசு அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

ரூ. 1,000 உதவி தொகை கேட்டு அரசு அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

ரூ. 1,000 உதவி தொகை கேட்டு அரசு அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

ரூ. 1,000 உதவி தொகை கேட்டு அரசு அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

ADDED : மார் 21, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : குடும்ப தலைவிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1,000 உதவிதொகை கேட்டு புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் பெண்கள் குவிந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

புதுச்சேரி அரசின் எவ்வித உதவித் தொகையும் பெறாத வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 1,000 ரூபாய் மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என, சட்டசபையில் நேற்று முன்தினம் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இது மட்டுமின்றி ஏற்கனவே ரூ. 1,000 வழங்கப்பட்டு வரும் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.அதையொட்டி நேற்று காலை புதுச்சேரி சாரத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலகத்தில் 1,000 மற்றும் 2,500 ரூபாய் கேட்டு ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திடீரென குவிந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அலுவலர்கள் என்ன செய்வது என தெரியாமல் திக்குமுக்காடினர். அப்போது, அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் குறித்து இதுவரை அரசிடம் இருந்து எந்தவித ஆணையும் எங்களுக்கு வரவில்லை. இத்திட்டத்திற்கு கவர்னரின் அனுமதி பெற்று, நிதி ஒதுக்கிய பின்பே உதவித்தொகை வழங்கும் பணி பயன்பாட்டுக்கு வரும். இதற்கு ஆன்லைன் அல்லது பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us