ADDED : செப் 18, 2025 11:21 PM
புதுச்சேரி: பெண்ணிடம் பஸ்சில் 5.5 சவரன் நகை திருடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, சண்முகாபுரம், மங்கலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சாந்தி, 55; இவர் கடந்த 11ம் தேதி தனது கணவர் முருகனுடன் சென்னையில் இருந்து பஸ் மூலம் திண்டிவனம் வந்து, அங்கிருந்து மற்றொரு பஸ் மூலம் புதுச்சேரி வந்தார். புதுச்சேரி முருகா தியேட்டர் அருகே இறங்கி ஆட்டோ மூலம் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, 5.5 சவரன் நகை வைத்திருந்த ஹேண்ட் பேக்கை காணவில்லை.
இதுகுறித்து டி நகர் போலீசில் சாந்தி அளித்துள்ள புகாரில், திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்சில் வந்தபோது, தனது சீட்டில் 2 பெண்கள் அமர்ந்து வந்ததாகவும், அவர்கள் இருவரும் ஜிப்மர் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இறங்கியதாகவும், அவர்கள் தான் தனது நகைப்பையை திருடி சென்றிருக்கலாம் என தெரிவித்திருந்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.